1906: சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 3886 பேர் பலியாகினர்.
1913: ஜப்பானில் பல்கலைக்கழகத்திற்கு முதல் தடவையாக பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.
1945: ஜப்பானிய பிரதமர் கன்டாரோ சுசுகியை படுகொலைசெய்வதற்கு முயற்சிக்கப்பட்டது.
1945: சீனாவின் கடைசி மன்னனான மன்சுகுவோ, சோவியத் படையினரால் கைது செய்யப்பட்டார்.
1946: இந்தியாவின் கொல்கத்தா நகரில் பாரிய கலவரம் ஏற்பட்டது. இதனால் 72 மணித்தியாலங்களில் சுமார் 4000 பேர் பலியாகினர்.
1960: பிரிட்டனிடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.
1960: அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் கிட்டின்ஜர் 102,800 அடி உயரத்திலிருந்து பரசூட்டில் குதித்து சாதனை படைத்தார்.
1962: இந்தியாவில் பிரான்ஸின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
No comments:
Post a Comment